×

மாவட்டத்தில் விதிமுறை மீறிய 46 வாகனங்களுக்கு அபராதம்

ஊட்டி, ஜூன் 19:   நீலகிரி மாவட்டத்தில் வரி செலுத்தாமல் இயக்கிய 46 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி இயக்கி ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டன.   மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் வாகனங்கள், டாக்சி, லாரிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் வரி செலுத்தப்படாமல் இயக்கப்பட்டு வந்தன. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் மாவட்டம் முழுவதும் வரி செலுத்தாமல் இயக்கிய வாகனங்களை பறிமுதல் செய்யும் பணி கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. இதில், நீலகிரி மாவட்டத்தில் வரி செலுத்தாமல், பெர்மிட் இன்றி இயக்கப்பட்டு வந்த 46 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறி இயக்கப்பட்ட ஒரு ஆம்னி பஸ் மற்றும் ஆட்டோ ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில், வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து வரி மற்றும் அபராதம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நல்லதம்பி கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் முறையாக வரி ெசலுத்தாமல், பெர்மிட் இன்றி இயக்கப்படும் வாகனங்கள் குறித்து தணிக்கை மேற்க்கொண்டோம். இதில், 46 வாகனங்கள் பெர்மிட், புதுப்பித்தல் சான்று மற்றும் வரி செலுத்தாமல் இயக்கியது தெரிய வந்தது. அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வரும் வாகனங்களை பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக வரி ெசலுத்திய பின் வாகனங்களை  இயக்க வேண்டும்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...