×

உக்கடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க குறிச்சியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உக்கடத்தில் ராட்சத கிரேன் மூலமாக 176 மேம்பால தூண் விரைவில் இணைப்பு

கோவை, ஜூன் 19: கோவை உக்கடம் மேம்பாலத்தில் விரைவில் 176 இணைப்பு தூண்கள் அமைக்கும் பணி நடத்தப்படவுள்ளது.   கோவை உக்கடம் மேம்பாலம் கட்டும் பணி 215 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. இதுவரை 39 தாங்கு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 16 தாங்கு தூண் அமைக்கவேண்டியுள்ளது. இந்த தூண்களுக்கு இடையே கான்கிரீட் இணைப்பு தூண்கள் பொருத்தவேண்டியுள்ளது. இதற்காக, கடந்த சில மாதங்களாக 23.50 மீட்டர் நீளமுள்ள 70 டன் எடையிலான கான்கிரீட் இணைப்பு தூண்கள் (கர்டர்) தயார் செய்யப்பட்டு வந்தது. இணைப்பு கம்பிகளுடன் இந்த கான்கிரீட் தூண்களை 9 மீட்டர் உயரமுள்ள தாங்கு தூண்களின் மீது வைத்து இணைத்து பொருத்தவேண்டியுள்ளது. பணிகளை நடத்தி வரும் ஒப்பந்த நிறுவனத்திடம் 80 டன் எடையிலான பொருட்களை தூக்கும் தன்மை கொண்ட கிரேன் மட்டுமே உள்ளது. இந்த கிரேன் மூலமாக இணைப்பு தூண்களை உயரமான இடத்தில் தூக்கி வைத்து பணிகளை நடத்த முடியாத நிலையிருக்கிறது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறையினர், 300 டன் எடைகளை தூக்கும் ராட்சத கிரேன்களை வரவழைக்க முடிவு செய்துள்ளனர். ஓரிரு நாளில் இந்த கிரேன்கள் கோவை வரவுள்ளது. கிரேன்கள் வந்ததும், உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை பாலம் பணி நடக்கும் இடத்தில் வரிசையாக குவிக்கப்பட்ட இணைப்பு தூண்கள் பாலத்தின் தாங்கு தூண்களின் மீது வைத்து இணைக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‘‘ தாங்கு தூண்களின் மீது இணைப்பு தூண் அமைக்கும் பணி நடத்தப்படும் போது போக்குவரத்து முற்றிலும் தடைபட வாய்ப்புள்ளது. இரு சக்கர வாகனங்களை அனுமதிப்பது குறித்து போலீசாருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இணைப்பு தூண்களை வேறு இடத்திற்கு மாற்றி வைத்து பணிகள் நடத்துவது சிரமம். தூண்களில் சிறிது சேதம் ஏற்பட்டாலும் இணைப்பு சரியாக இருக்காது. தூண்களை பொருத்த 6 மாதமாகி விடும்.  அதுவரை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே வாகன போக்குவரத்தில் மேலும் மாற்றம் செய்யவேண்டியிருக்கும், ’’ என்றார்.

Tags :
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி