ஜெய் ராம் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி

திருப்பூர், ஜூன் 19: திருப்பூர் ஜெய்  ராம் பொறியியல் கல்லூரி மற்றும் திருப்பூர் குமரன் செஸ் அகாடமி இணைந்து மாநில அளவிலான செஸ் போட்டியை நடத்தியது.மாநிலம் முழுவதும் 350 மாணவர்கள் கலந்து கொண்ட செஸ் போட்டியை கல்லூரி பொருளாளர் கோவிந்தசாமி, திருப்பூர் குமரன் செஸ் அகாடமி தலைவர் பாரதிராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் ரமேஷ்குமார் மாணவர்களிடம் உரையாற்றினார்.
இதில் முதல் 100 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  இதில், திருப்பூர் குமரன் செஸ் அகாடமி செயலாளர் லிங்கேஸ் அருண்குமார், பொருளாளர் கிருத்திகா, துணைத்தலைவர்கள் மணி, செந்தில்குமார், ஆலோசகர் ராஜேந்திரன், துணை செயலாளர்கள் தாமோதரன், சந்திரன், திருப்பூர் மாவட்ட செஸ் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் சிவன், பொருளாளர் ராஜேந்திரன், மற்றும் சர்வதேச நடுவரான சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED மாநில அளவிலான செஸ் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்