மது விற்ற 3 பேர் கைது

திருப்பூர், ஜூன் 19: திருப்பூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாநகர பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் மாநகரப் பகுதிகளில்  சோதனையிட்டனர். அதில் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பஸ் நிலையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த செந்தில்குமார் (37) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மாநகர மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராதா நகர் டாஸ்மாக் கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் மது விற்பனை செய்த மகாலிங்கம் (32) என்பவரை கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தாராபுரம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் மது விற்பனையில் ஈடுபட்ட கார்த்திகேயன் (30)என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 21 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED மதுபாட்டில் விற்றவர் கைது