×

நொய்யல் ஆற்றில் தொடரும் அவலம் வெள்ளை நுரையுடன் ஓடும் சாயக்கழிவு நீர்

திருப்பூர், ஜூன் 19: திருப்பூர் காசிபாளையம் நொய்யல் ஆற்றில் நேற்று சாயக்கழிவுநீர் கலந்தோடியதால் வெள்ளை நுரையுடன் கழிவு நீர் காணப்பட்டது.திருப்பூர், நொய்யல் ஆற்றையொட்டி  பல சாய ஆலைகளும், சுத்திகரிப்பு நிலையங்களும் இயங்கி வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளை கலப்பதை வாடிக்கையாக சில சுத்திகரிப்பு நிலையங்கள் கொண்டுள்ளன. இது போன்ற சாயஆலை நிறுவனங்கள் சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் நொய்யல் ஆற்றில் மற்றும் அதன் கிளை ஓடைகளிலும் விடுகின்றனர். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் வீடுகளில் சாயம் ஏற்றி(டையிங் செய்து) அதிலிருந்து வரும் சாயக்கழிவுகளை அருகில் செல்லும் சாக்கடை கால்வாயிலும் மறைமுகமாக திறந்து விடுகின்றனர்.

இந்நிலையில்  திருப்பூர், நல்லூரையடுத்துள்ள, காசிபாளையத்தில் இருந்து சிட்கோ செல்லும் வழியில் ஒரு தடுப்பணை உள்ளது.  இந்நிலையில் அந்த தடுப்பணையில் கடந்த சில நாட்களாக சாயக்கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஆற்றில் ஓடுவதால் பொங்கும் நுரையுடன், துர்நாற்றம் வீசுவதோடு, பச்சை நிறத்தில், தடுப்பணையில் இருந்து சாயக்கழிவுகள் வழிந்தோடுகிறது.  மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை.  தொடந்து நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுகள் நுரையுடன் வந்த வண்ணமே உள்ளது. எனவே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Nooyal River ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக நொய்யல்...