×

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து கோயில் நிலம் 84 சென்ட் மீட்பு

திருப்பூர், ஜூன் 19: திருப்பூர், புதிய பஸ் நிலையம் எதிரே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் நிலங்களை தனியார்கள் வீடு கட்டுவதற்கும், கம்பெனிகள் கட்டுவதற்கும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை, மீட்க வேண்டும் என இந்து அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, திருப்பூர் புதிய பஸ் நிலையம் எதிரே மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 84 சென்ட் இடம் கடந்த 20 ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை அப்பகுதி பொதுமக்களிடம் உள்ளது. இந்த  இடத்தை சுற்றி தனியார் சார்பில் முள்வேலிகளும், இரும்பு கொட்டகைகளும் அமைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் உத்தரவிட்டார். அதன்படி, நேற்றைய தினம் உதவி ஆணையர் ஹர்சினி தலைமையில் நில அளவையர்கள் அந்த கோயிலுக்கு சென்றனர். பின்னர், கோயிலுக்கு சொந்தமான மொத்த இடத்தையும் அளவீடு செய்தனர். இதையடுத்து, இந்த நிலத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த முள்வேலிகள் அகற்றப்பட்டு கோயில் நிலம் மீட்கப்பட்டது. இதே போன்று, பிற பகுதிகளிலும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : land ,Temple ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...