விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்

பாகூர், ஜூன் 19: புதுவை தவளக்குப்பம் அடுத்துள்ள பூரணாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(36). இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் நிலத்தில் வேலி அமைப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த பிரச்னை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அரவிந்தராஜ் என்பவர் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குள் வீச்சரிவாளுடன் அத்துமீறி நுழைந்து அவரை கைகளால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கோபாலகிருஷ்ணன், தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அரவிந்தராஜை தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED வீடு புகுந்து விவசாயி மீது தாக்குதல்