×

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

கடலூர், ஜூன் 19: கடலூர் சாராய வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் அருகே கடந்த மாதம் 2ம் தேதி திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் குமரய்யா தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, திருவந்திபுரம் பாலக்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து கடலூர் அருகே உள்ள பில்லாலி தொட்டி பகுதியை சேர்ந்த பாபு (57) என்கிற சாராய வியாபாரியை கைது செய்தனர். தீவிர விசாரணையில் பாபு மீது கடலூர் மற்றும் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவில் ஏராளமான வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தொடர் சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் பொருட்டு பாபு மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார். இதையடுத்து சாராய வியாபாரி பாபு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Arrester ,
× RELATED சாராயம் காய்ச்சி விற்றவர் கைது