×

சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராமத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்

சேத்தியாத்தோப்பு, ஜூன் 19:  சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராமத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராமத்தில் உள்ள தெருக்களில் மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி கிராம மக்களை பெரிதும் சிரமப்படுத்தி வந்தது. அவ்வாறான காலத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் உள்ளிட்டோரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் இப்பகுதி வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கியும் வந்தன. இதையடுத்து கரைமேடு கிராமத்துக்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணனிடம் இப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 அதன்படி கிராமமக்களின் கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கி பாண்டியன் தெருவிலிருந்து திருவிக தெரு வழியாக 120 மீட்டர் நீளத்துக்கு வடிகால் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த வாய்க்கால் ஜெயங்கொண்டான் வாய்க்காலில் சேர்ந்து மழைநீர் வடிவதற்கு ஏற்ற வகையிலும் அப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் தெரிவிக்கும் போது மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைப்பது போலவே கரைமேடு கிராமத்தில் அனைத்துதெருக்களிலும் தரமான மேடான சாலை அமைத்து தரவும் அதிகாரிகள் முன்வந்தால் கிராமத்தில் மழை தண்ணீர் தேங்காமல் வடிந்து விடும். அதற்கும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : drainage plant ,village ,Sethiyatope ,Karimedu ,
× RELATED பாணாவரம் அருகே விழிப்புணர்வு உடல்,...