ராஜபாளையம் அருகே விஏஓவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராஜாபளையம், ஜூன் 18: ராஜபாளையம் அருகே சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாகம் அலுவலரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் அருகே, மேலராஜகுலராமன் கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்கள், விவசாயிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா அடங்கல், குடும்ப தலைவர் இறப்பு நிதி உள்ளிட்ட சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அய்யனாபுரம் பஸ்நிறுத்தம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாவட்ட செயற்குழு முருகேசன், ஒன்றியச் செயலாளர் முனியாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 30 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ‘கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கோஷமிட்டனர்.

Tags : demonstration ,VAO ,Rajapalayam ,
× RELATED காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்