ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் பெண்கள் அவதி போக்குவரத்து போலீசார் இல்லாததால் நான்குவழிச்சாலையில் விபத்து அபாயம்

விருதுநகர், ஜூன் 18: விருதுநகர் புல்லாலக்கோட்டை பிரிவு நான்குவழிச்சாலையில், போக்குவரத்து போலீசார் இல்லாதால், வாகன ஓட்டிகள் குறுக்கும், நெடுக்குமாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் உள்ள புல்லாலக்கோட்டை ரோடு சந்திப்பு நான்குவழிச்சாலையில் ஆண்டுக்கு 30க்கும் மேற்பட்ட விபத்துகளும், உயிர்ப்பலிகளும் ஏற்படுகின்றன. இந்த இடத்தில் விபத்து நடக்கும் நேரங்களில், மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதும், அவர்களை போலீசார் சமாதானம் என்ற பெயரில் ஏமாற்றி அனுப்புவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

நான்குவழிச்சாலையில் பள்ளி, மாணவ, மாணவியர் கடப்பதை கவனத்தில் கொண்டு, புல்லாக்கோட்டை ரோடு நான்குவழிச்சாலை சந்திப்பில், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால், சமீப காலமாக புல்லாக்கோட்டை ரோடு சந்திப்பில் போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தங்களது இஷ்டத்திற்கு குறுக்கும், நெடுக்குமாக செல்கின்றனர். இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நான்குவழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால், விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், புல்லாலக்கோட்டை ரோடு சந்திப்பில் போக்குவரத்து போலீசாரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Andhra Pradesh ,
× RELATED ராஜபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு