×

கிராம மக்கள் சாலை மறியல்

திருச்சுழி: திருச்சுழியில் உள்ள முத்துராமலிங்க நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர், வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தாலும், ஒரு தரப்பைச் சேர்ந்த பொதுமக்கள் வாழும் பகுதியில் மட்டும், நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்த நிலையில், காலிக்குடங்களுடன் பெண்கள் தெருத்தெருவாக அலைகின்றனர்.

இந்நிலையில், மாதர் சங்கத்தினர் தலைமையில் முத்துராமலிங்க நகரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்ஐ சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவக்கரசி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் செய்து தருவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags : Village people ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி