மாலையில் படியுங்கள் மகளின் காதலை கண்டித்த பெற்ேறார் மீது தாக்குதல்

போடி, ஜூன் 18: போடி பெரியாண்டவர் குளத்து தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி ராணி. இவர்களின் மகள் கல்லூரியில் படித்து வருகிறார். போடி வினோபாஜிகாலனியை சேர்ந்த மணிகண்டன் மகன் பார்த்திபன்(21) என்பவரை அவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது, இதை மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன், மதுரை வீரன் தெருவைச் சேர்ந்த மதன்குமார்(20) என்பவருடன் சேர்ந்து மாணவியின் பெற்றோரை அடித்து உதைத்தனர். இதுகுறித்து போடிநகர் காவல்நிலையத்தில் மாணவி புகார் செய்தார். இதனடிப்படையில் பார்த்திபனை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மதன்குமாரை தேடி வருகின்றனர்.

Tags : attack ,
× RELATED பெரம்பலூர் அருகே தேர்வில்...