×

அன்னஞ்சி கிராம மக்கள் அவதி குப்பைகளுக்கு தீ வைப்பதால் சாலையில் விபத்து அபாயம்

உத்தமபாளையம், ஜூன் 18: க.புதுப்பட்டி - கம்பம் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.க.புதுப்பட்டி பேரூராட்சியில் தினந்தோறும் அதிகளவில் குப்பைகள் அள்ளப்படுகின்றன. அத்துடன் வீடுகளில் வாங்கப்படும் குப்பைகள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் சென்று கொட்ட வேண்டும். காரணம் இதில் உள்ள கழிவுகளால் மக்களுக்கு எந்தவிதமான தொற்றும் ஏற்படக்கூடாது. துர்நாற்றத்தால்  தொற்றுநோய் பரவக்கூடாது. தினந்தோறும் அள்ளப்படும் குப்பைக்கழிவுகளில் பிளாஸ்டிக், கோழிக்கழிவுகள், நீண்டநாள் அகற்றப்படாத குப்பைகள் போன்றவை உள்ளன. இதனை உரிய முறையில் அப்புறப்படுத்திட தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.   ஆனால் க.புதுப்பட்டி பேரூராட்சியிலோ கொட்டப்படும் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் மீண்டும் கம்பம் - க.புதுப்பட்டி சாலையோரங்களில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகின்றன. இச்சாலை வழியே தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

இதேபோல் டூவீலர்கள், கார்கள் போன்றவை இந்த சாலை வழியே கடந்து செல்கின்றன. குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயில் இருந்து பரவக்கூடிய புகையினால் கண்களில் எரிச்சல் உண்டாகி எதிரே வரக்கூடிய வாகனங்களின் மீது மோதக்கூடிய அபாய நிலை உள்ளது. இரவில் வாகன ஓட்டிகளுக்கு புகையால் சாலையில் எதுவும் தெரிவதில்லை. எனவே, குப்பைக்கு தீ வைப்பதை தடுக்க  க.புதுப்பட்டி டவுன்பஞ்சாயத்து நிர்வாகம் முன்வரவேண்டும்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சாலையோரங்களில் தீ வைக்கப்படும் குப்பைக் கழிவுகளில் இருந்து வெளியேறும் மாசுகளால் அதிகம் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுத்து நிறுத்தவேண்டும்’’ என்றனர்.

Tags : accident ,road ,
× RELATED கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில்...