மாணவியை கேலி செய்த வாலிபர் கைது

உத்தமபாளையம், ஜூன் 18: உத்தமபாளையம் அருகே பிளஸ் 2 மாணவியை கேலி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். உத்தமபாளையம் அருகே உள்ள கருக்கோடையை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அண்ணாமலை(25). இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவியை தொடர்ந்து கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கோம்பை போலீசார் வழக்குப்பதிந்து, அண்ணாமலையை கைது செய்தனர்.

Tags : student ,
× RELATED முதியவரை தாக்கியவர் கைது