புதிய நிர்வாகிகள் அறிமுக விழா தனியார் நிறுவனத்தில் பணம் கொள்ளை

உத்தமபாளையம், ஜூன் 18: உத்தமபாளையத்தில், கார் சர்வீஸ் சென்டரை உடைத்து பணம் மற்றும் கம்ப்யூட்டரை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே சின்னஓவுலாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பின்னர் அவர் சர்வீஸ் சென்டரின் கதவை பூட்டிவிட்டு சென்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் அவர் வழக்கம் போல் சர்வீஸ் சென்டரை திறக்க வந்தார். அப்போது பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ.12 ஆயிரம் ரொக்கம் மற்றும் கம்ப்யூட்டர் கொள்ளையடிக்கப்பட்டது அவருக்கு தெரிய வந்தது. இது குறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : executives ,ceremony money robbery ,company ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது