கல்வீச்சு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது கொல்கத்தா தாக்குதலைக் கண்டித்து தேனி மாவட்டத்தில் 600 டாக்டர்கள் ஸ்டிரைக்

தேனி, ஜூன் 18: கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களுக்கு ஆதரவாக நேற்று தேனி மாவட்டத்தில் 600 டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஆனால், அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். கொல்கத்தாவில் தாக்கப்பட்ட டாக்டர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் 600 டாக்டர்கள் ஸடிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 150 மருத்துவமனைகள் மூடப்பட்டன. வெளிநோயாளிகளுக்கும், சாதாரண நோயாளிகளுக்கும் மட்டுமே சிகிச்சை தடைபட்டது. அவசர சிகிச்சை பிரிவு தொடர்ந்து செயல்பட்டது.

இதுகுறித்து இந்திய மருத்துவக் கழக தேனி மாவட்ட டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கொல்கத்தாவில் டாக்டர்கள் தாக்கப்பட்டது மிகவும் அபாயகரமான சமூக பாதுகாப்பற்ற நிலையை உணர்த்துகிறது. பாதுகாப்பு உணர்வு இல்லாவிட்டால் டாக்டர்களால் நம்பிக்கையுடன் சிகிச்சை அளிக்க முடியாது. எனவே டாக்டர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்தியா முழுவதும் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறினர். தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் டாக்டர்கள் பணிக்கு வந்ததாகவும், ஸ்டிரைக்கால் நோயாளிகள் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் தேனி சுகாதார துணை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்: ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடந்தஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவர் சங்கம் கம்பம் பள்ளத்தாக்கு கிளைச்செயலாளர் சிவா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு மருத்துவ நல சங்க செயலாளர் அரவாளி, பட்டமேற்படிப்பு சங்க தலைவர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளாக மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : attack ,Kolkata ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது