×

காளையார்கோவிலில் காட்சிப் பொருளான ஹைமாஸ் விளக்கு திருடர்கள் ஜாலி

காளையார்கோவில், ஜூன் 18: காளையார்கோவில் பஸ்நிலையத்தில்  சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு எரியாமல் காட்சிப் பொருளாக உள்ளது. மதுரை - தொண்டி மாநில நெடுஞ்சாலை காளையார்கோவில் பஸ்நிலையம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது சில நாட்களாக எரியாமல் காட்சிப் பொருளாக உள்ளது.  காளையார்கோவில் பஸ்நிலையத்தைச் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதி என்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

 இந்த நிலையில் பஸ்நிலையத்தில் மின்விளக்கு பற்றாக்குறையை பூர்த்தி செய்ய ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது அதுவும் பழுது ஏற்பட்டுள்ளதால் பஸ் நிலையம் இருள் சூழந்து காணப்படுகின்றது. தற்போது இப்பகுதிகளில் திருட்டுச் சம்பவம் மற்றும் வழிப்பறி கொள்ளை  போன்றவை அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் வெளியூர்  செல்லும் பயணிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
காட்சிப் பொருளாக உள்ள ஹைமாஸ் விளக்கை செயல்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lamp thieves ,Kaliyarikovil ,
× RELATED காளையார்கோவிலில் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை கிராம மக்களே அகற்றினர்