×

திருப்புத்தூரில் பகலில் எரியும் தெருவிளக்குகள் பேரூராட்சி ஊழியர்கள் அலட்சியம்

திருப்புத்தூர், ஜூன் 18:  திருப்புத்தூர் பேரூட்சியில் ஊழியர்களின் அலட்சியத்தால் தொடர்ந்து 3 நாட்களாக பகலிலும் தெருவிளக்குகள் எரியும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருப்புத்தூர்  பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 100க்கும் மேற்பட்ட  தெருகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. இந்த  தெருவிளக்குகளை தினந்தோறும் போட்டு அனைப்பதற்கு என்று பேரூராட்சியில்  ஊழியர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அக்ரஹார  தொப்புத்தெரு, நான்கு ரோடு, தேரடிவீதி, அஞ்சலக வீதி, நடுத்தெரு உள்ளிட்ட  நகரின் பல இடங்களிலும் பகலிலும் தெருவிளக்குகள் எரிகின்றன. இதனால் அதிகமான  மின்சாரம் தேவையில்லாமல் வீணாகிறது. சில நேரங்களில் இப்பகுதிகளில் இரவு  தெருவிக்குள் போடாமலே உள்ளது.

இதை முறையாக தினந்தோறும் பார்த்து அணைக்க  வேண்டிய ஊழியர்களின் அலட்சியத்தால் பேரூராட்சியின் பணம்  விரயமாவது மட்டுமல்லாமல், தேவையில்லாத மின்சாரமும் விரயமாகிறது. இரவு  நேரங்களில் மழை பெய்யும் போது திடீரென மின்தடை ஏற்பட்டால் மீண்டும்  மின்சாரம் வந்தாலும் கூட தெருவிளக்குள் எரிவதில்லை. இந்நிலையில், இதுபோன்று  தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக தெருக்களில் விளககுள் எரிவதை உடனடியாக  நிறுத்த வேண்டும். தற்பொது உள்ள மின்சார தட்டுப்பாட்டில், இனிவரும்  காலங்களில் பேரூராட்சி ஊழியர்கள் இதுபோன்று தவறுகள் நடைபெறாமல்  பார்ப்பதோடு, பகலில் தெருவிளக்குகள் எரிகிறதா என கண்காணிக்க வேண்டும்  என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Tirupur ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்