×

அனைத்து குளங்களிலும் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜூன் 18:  சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. தலைமை வகித்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது: சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்னதாகவே அனைத்து நீர்வரத்து கால்வாய்களை சீர்படுத்துவதுடன் குளங்கள் மற்றும் கண்மாய்களில் தூர்வாரும் பணியை முடிக்க வேண்டும்.
 தற்போது 14 குளங்களில் தூர்வாரும் பணி நடத்த திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மேலும் மூன்று குளங்களும் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். நகராட்சி நிர்வாக அலுவலர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடும் போது குழுக்கள் அமைத்து செயல்படுவதுடன் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் உருவாகாதவாறு கண்காணிக்க வேண்டும். நீர்வரத்து கால்வாய்களை ஆய்வு செய்து பழுதடைந்த பகுதிகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, சிவகங்கை நகராட்சி ஆணையர் அயூப்கான் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...