சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவர்கள் போராட்டம்

சிவகங்கை, ஜூன் 18:  சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர் தாக்கப்பட்டடை கண்டித்து நாடு முழுவதும் நடந்து வரும் மருத்துவர்களின் போராட்டத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்திலும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் உட்பட மொத்தம் ஆயிரத்து 500 மருத்துவர்கள் தங்கள் கைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 

Tags : Doctors ,district ,Sivagangai ,
× RELATED மன அழுத்தத்தை குறைக்கும் வகையில்...