×

தனியார் மருத்துவமனைகளில் ஓபி இல்லை கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்த அரசு டாக்டர்கள்

ராமநாதபுரம், ஜுன் 18:மேற்கு வங்க மாநிலத்தில்  பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் நாடு தழுவிய தனியார் மருத்துவமனை டாக்டர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட தனியார் மருத்துவமனைகளில்  ஒருநாள் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் வேலை நிறுத்தம் செய்தனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ். மருத்துவக் கல்லூரில் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பயிற்சி டாக்டர் ஒருவர் தலையில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரியும் தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள்  மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மேற்கு வங்க மாநிலம் முழுதுவம் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவர்கள் கழக ராமநாதபுரம் அமைப்பின் சார்பில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வெளி நோயாளிகள் சிகிச்சை அளிப்பதை புறக்கணித்தனர்.

இது குறித்து இந்திய மருத்துவகழக மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னத்துரை அப்துல்லா கூறுகையில், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் இந்திய மருத்துவர்கள் கழகத்தின் சார்பில் தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாள் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை நடைபெறாது. 19 மாநிலத்தில்  டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டங்கள் உள்ளது. தமிழகதத்தில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மத்தியரசு டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் கொண்ட வர வேண்டும். அனைத்து மருத்துவமனைகளும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இன்றைய போராட்டத்தில் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவித்தார்.


Tags : hospitals ,
× RELATED டெல்லி அரசு மருத்துவமனைகள், மொகல்லா...