×

ராமநாதபுரம் ஜிஹெச் ரோட்டில் வேரோடு சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

ராமநாதபுரம், ஜுன் 18: ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரோட்டில் வேரோடு சாய்ந்த மரம், நீண்ட நேரமாக அகற்றாத நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரோட்டில் மருத்துவமனை எதிர்புறம் சாலையோரத்தில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கிறது. சாலையோரத்தில்  நிழல் தரும் வகையில் பல ஆண்டுகளாக வளரும் மரங்கள் உள்ளன. இப்பணிகளுக்காக சதக் சென்டர் அருகே 6 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பள்ளத்தின் அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்துள்ள மரம் நேற்று வேரோடு ரோட்டின் நடுவே சாய்ந்தது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த வழியில் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் சென்றன. மரம் விழுந்து நீண்ட நேரமாகிவிட்ட நிலையில் கால்வாய் தோண்டும் இயந்திரம் மூலமாக மரத்தை ஓரத்தில் தள்ளினர். தகவலறிந்த   தீயணைப்புதுறையினர் வந்து மரக்கிளைகளை அறுத்து அகற்றி சாலை போக்குவரத்தை சரி செய்தனர். கால்வாய் பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள மற்ற மரங்கள் விழாத வகையில் பள்ளங்களை தோண்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பொறுமை இழந்த மக்கள்ரோட்டின் குறுக்கே மரம் விழுந்ததால் சாலையை கடக்க முடியாமல் மக்கள் இருபுறத்திலும் நின்று கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காத நிலையில் பொறுமையிழந்த மக்கள் ஆபத்தை உணராமல் மரத்தின் மேல் ஏறி சென்றனர்.

Tags : Ramanathapuram GH Road ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை