திறந்தவெளி கால்வாயால் மாணவர்கள் அச்சம்

ராமநாதபுரம், ஜூன் 18: ராமநாதபுரத்தில் திறந்த நிலையில் உள்ள கால்வாயை கடந்து செல்ல மாணவர்கள் சிரமமடைந்து வருகின்றனர்.ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை சாலையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி உள்ளது. பள்ளி முன்பு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த கால்வாயை கடந்து செல்ல சிறிய மரப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாயை கடக்க முயலும் மாணவர்களில் சிலர் அதற்குள் தவறி விழுந்து காயமடைகின்றனர். இதனால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மாணவர்கள் நலன் கருதி கால்வாய் மீது உடனடியாக பாலத்தை கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : canal ,
× RELATED கமுதி அருகே திமுகவில் இணைந்த 200 அதிமுகவினர்