ரயில் நிலையத்தில் ஆதரவற்றோர் மீட்பு

மானாமதுரை, ஜூன் 18: மானாமதுரை ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்து வந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் பிச்சை எடுத்து வந்த ஆதரவற்ற பஞ்சவர்ணம்(30), லெட்சுமி (63) ஆகியோர் குறித்து ரயில்வே எஸ்ஐ நாச்சி விசாரித்தார். அப்போது தாங்கள் ஆதரவற்றவர்கள் என்றும், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் ரயில்வே காவல் நிலையம் அழைத்துச் சென்று குளிக்கவைத்து அவர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கி மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் ரோட்டில் உள்ள தனியார் காப்பகத்தில் உரிய சாட்சிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.Tags : Rescuers ,railway station ,
× RELATED ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு...