×

நிறுத்தப்பட்ட கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை

ராமநாதபுரம், ஜுன் 18: ராமநாதபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கிராமசபை கூட்டங்களில் நடத்திட கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.தமிழகத்தில் ஆண்டு தோறும் குடியரசு தினம் ஜனவரி 26, உழைப்பாளர் தினம் மே 1, சுதந்திரதினம் ஆகஸ்ட் 15, காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என சட்ட நடைமுறை உள்ளது. கிராமசபை கூட்டங்களில் கிராம மக்கள் ஒன்று கூடி தங்கள் கிராமத்தில் உள்ள நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, சாலை வசதி, மருத்துவ வசதி, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றலாம். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த மே 1ம் தேதி  உழைப்பாளர்கள் தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் பாராளுமன்ற  தேர்தல் நடத்தை விதிகளின்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியான பின்னரும் மே1, அன்று நிறுத்திவைக்கப்பட்ட கிராமசபை கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தெற்குவாணி வீதி குமரன், வெண்குளம் ராஜு ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.


Tags : council meeting ,collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...