×

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஜமாபந்தி கணக்கு ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம் ஜூன் 18: ஆர்.எஸ் மங்கலம் தாலுகாவிற்குட்பட்ட வருவாய் கிராமங்களின் தீர்வாயக் கணக்கு (ஜமாபந்தி) உதவி ஆணையர் (ஆயம்) தலைமையில் நடைபெற உள்ளது.ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஆனந்தூர், ஆர்.எஸ்.மங்கலம், சோழந்தூர் என மூன்று வருவாய் உள்வட்டங்கள் உள்ளன. இந்த வருவாய் உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தனிக்கை செய்யப்பட்டு சரிபார்க்கப்படுவது வழக்கம். அதேபோல் 1428ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் உதவி ஆணையர் (ஆயம்) ரவிச்சந்திரன் தலைமையில் வருகின்ற 19.6.2019 முதல் 21.6.2019 முடிய ஜமாபந்தி கணக்கு ஆய்வு செய்யப்பட உள்ளது. இதில் 19ம் தேதி புதன்கிழமை ஆனந்தூர் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களான சாத்தனூர், ஆணையார் கோட்டை, ராதானூர், கோவிந்தமங்களம், ஓடக்கரை, ஆனந்தூர், திருத்தேர்வளை, கொக்கூரணி, சேத்திடல், வரவணி, செங்குடி போன்ற ஊர்களுக்கும் அடுத்த நாள் 20ம் தேதி வியாழக்கிழமை ஆர்.எஸ் மங்கலம் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களான கருங்குடி, கூடலூர், கள்ளிக்குடி பகவதிமங்கலம், அறுநூற்றிமங்கலம், கவ்வூர், எபத்தார் தேவக்கோட்டை, ராஜசிங்கமங்கலம், புல்லமடை, ராமநாதமடை, இரட்டையூரணி, வில்லடிவாகை ஓடைக்கால், குலமாணிக்கம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கும், அதற்கடுத்த நாள் 21ம் தேதி சோழந்தூர் உள்வட்டத்திலுள்ள வருவாய் கிராமங்களான சித்தூர்வாடி, உப்பூர், ஊரணங்குடி, களங்காப்புளி, பாரனூர், அழகர் தேவன் கோட்டை, தும்படைக்க கோட்டை, அரியான்கோட்டை, ஆட்டாங்குடி, சீனாங்குடி, சோழந்தூர், கருங்குடி, துத்தியேந்தல், வளமாவூர், திருப்பாலைக்குடி உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி (ஜமாபந்தி) நடைபெற உள்ளது. இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சாந்தி கூறுகையில், ஆர்.எஸ் மங்கலம் தாலுகாவில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி மேற்கண்ட நாட்களில் ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாய கணக்கு ஆய்வு , ஒய்வூதியம், ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை சம்மந்தமான மனுக்களை பொதுமக்கள் வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து பயன்படுமாறு தெரிவித்துள்ளார்.


Tags : RSMangalam Taluka ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை