×

ஐகோர்ட் நீதிபதி தகவல் போக்குவரத்து நெரிசலை தடுக்க சாய்ந்து கிடக்கும் சிக்னல்களை சரி செய்வது எப்போது?

மதுரை, ஜூன் 18: மதுரை நகரில் போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் சாய்ந்து, பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரிப்பாளையம், ஆரப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசாரின் சார்பில் சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் சிறிதளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மாட்டுத்தாவணி, கே.கே நகர் உள்ளிட்ட சில இடங்களில் சிக்னல் கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்துள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.மேலும் முக்கிய இடங்களில் போக்குவரத்து பிரிவு போலீசார் கூடுதலாக நிறுத்தப்படுவதில்லை. இதனால் சிக்னல்கள் கண்காணிப்பு இல்லாமல் உள்ளன. பல இடங்களில் இருக்கும் சிக்னல்களில் உள்ள வண்ணங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியவில்லை. இதில் உரிய பல்புகளை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் பல்வேறு காரணங்களால் செயல்பாடின்றி முடங்கி கிடக்கும் சிக்னல்களை உடனடியாக சரி செய்யவேண்டும். சில இடங்களில் சரியாக இயங்காமல் இருப்பதால் விபத்துக்கள் நடக்கிறது.

சமூக ஆர்வலர் திருப்பரங்குன்றம் முத்து கூறுகையில், ‘‘மதுரை நகரில் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட்களில் பஸ்சில் இருந்து வரும் பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கவும், ஏறவும் முடியாமல் பல இடங்களில் ஆட்டோக்களை போட்டு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் நகரில் செயல்படாமல் இருக்கும் சிக்னல்களை உடனடியாக சரி செய்ய முன் வரவேண்டும். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மற்றும் சாய்ந்து கிடக்கும் சிக்னல்களை சரி செய்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நிம்மதியாக பயணம் செய்ய முடியும்’’ என்றார்.


Tags : judge judge ,
× RELATED ஒவ்வொரு ஐகோர்ட் நீதிபதி முன்பு 4,500 வழக்கு நிலுவை: சட்ட அமைச்சகம் தகவல்