×

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் துவங்க மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படும்

திண்டுக்கல், ஜூன் 18: திண்டுக்கல் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்று தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் துவங்க, ரூ.ஒன்று முதல் ரூ.10 லட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கடன் பெற வங்கியில் பரிந்துரைக்கப்படும். தொழில் முனைவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி, வயது 18 முதல் 45க்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.ஒன்றரை லட்சத்திற்குள் இருக்க வேண்டும். www.msmeonline.tn.gov.in/uyegp?? என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் தொழில் துவங்க வயது 21 முதல் 35 வரை பொதுபிரிவிற்கும், 25 முதல் 45 வயது சிறப்பு பிரிவினர் உற்பத்தி மற்றும் சேவை தொழில் துவங்கலாம். முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடிவரை 25 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்க பரிந்துரைக்கப்படும். www.msmeonline.tn.gov.in/needs?? என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் தொழில் துவங்க, அதிக பட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும். உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம், வேலை பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் திட்டத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அவசியமாகும்.தொழில் துவங்க இருக்கும் இடத்தை பொறுத்து, 15 முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு www.kvifcoline.gov.in?? என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தொழில் முனைவோர் அரசுத்துறைகளிடமிருந்து பெற வேண்டிய உரிமங்கள், தடையில்லா சான்றுகள், ஒப்புதல்கள் மற்றும் மின் இணைப்பு போன்றவற்றுக்கு அலுவலகங்களுக்கு செல்லாமல் < http://easybusiness.tn.gov.in?? > என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தில் 0451-2471609 என்ற எண்ணில் பேசலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Dindigul district ,start ,
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடை...