×

வத்தலக்குண்டு அருகே முதியோர் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

வத்தலக்குண்டு, ஜூன் 18: வத்தலக்குண்டு அருகே முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.வத்தலக்குண்டு அருகே கணவாய்ப்ப்டி காலனியிலுள்ள லிட்டில் டிராப்ஸ் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வத்தலக்குண்டு ஈடன் கார்டன் லயன்ஸ் கிளப் சார்பாக முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.விழாவுக்கு லயன்ஸ் கிளப் தலைவர் பொன்.அண்ணாத்துரை தலைமை வகித்தார் செயலாளர் ஜெர்மன் ராஜா வரவேற்றார். லயன்ஸ் கிளப் வட்டார தலைவர் கென்னடி | நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிர்வாகிகள் தெய்வேந்திரன், சாந்தினி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதியோர் இல்ல ஒருங்கிணைப்பாளர் கவிதா நன்றி கூறினார்.

Tags : Elderly Welfare Assistance Ceremony ,Wattalakundu ,
× RELATED வத்தலக்குண்டுவில் சாலையின்...