ஓய்வூதியர் சங்க மாநாடு

நத்தம், ஜூன் 18: நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்டக்கிளை மாநாடு நடந்தது. சங்க தலைவர் முனியாண்டி தலைமை வகிக்க, மாவட்ட பொருளாளர் சுருளிவேல் மாநாட்டை துவங்கி வைத்தார். செயலாளர் பெருமாள் அறிக்கை வாசித்தார். மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இணை செயலாளர் சின்னச்சாமி, நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, சுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pensioners Association Conference ,
× RELATED சேத சாலையால் சிரமம் திண்டுக்கல்லில் திமுக கட்சி தேர்தல் ஆலோசனை