×

கொல்கத்தா சம்பவம் கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்

திண்டுக்கல், ஜூன் 18: கொல்கத்தாவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து திண்டுக்கல்லில் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொல்கத்தாவில் மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொல்கத்தா வன்முறை சம்பவங்களை கண்டிக்கும் வகையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் 520 மருத்துவமனைகளில் உள்ள 900 மருத்துவர்கள் நேற்று காலை 6 மணிமுதல் மருத்துவமனைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 திண்டுக்கல் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நேற்று அரசு மருத்துவமனை முன்பு அனைத்து மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கிளை தலைவர் ரவி தலைமை தாங்கினார். பொருளாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில துணைத் தலைவர் சீனிவாசன் வன்முறையை கண்டித்து உரையாற்றினார். வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.


Tags : Doctors ,incident ,Kolkata ,
× RELATED தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3...