×

பழநியில் கோடை விடுமுறைக்குபின் கல்லூரிகளில் வகுப்புகள் துவக்கம்

பழநி, ஜூன் 18: பழநி பகுதியில் கோடை விடுமுறைக்கு பின் நேற்று கல்லூரிகளில் வகுப்புகள் துவங்கின.பழநியில் கோடை விடுமுறைக்கு பின் நேற்று கல்லூரி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பழநி அருகே சின்னக்கலையம்புத்தூரில் உள்ள பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில் நேற்று கோடை விடுமுறைக்கு பின் வகுப்புகள் நேற்று துவங்கின. 2ம் ஆண்டு மாணவிகள் முதலாமாண்டு சேர்ந்த மாணவிகளுக்கு மலர்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி, அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : summer vacation ,
× RELATED கோவை அரசு கலைக்கல்லூரியில் முதுகலை வகுப்புகள் இன்று துவக்கம்