மூடி அமைக்காததால் கீழே விழுந்து பலர் காயம் ரங்கத்தில் சாக்கடை கால்வாய்க்கு கருமாதி

திருச்சி, ஜூன் 18: ரங்கம் வடக்குதேவி தெருவில் மாநகராட்சி உதவிஆணையரின் குடியிருப்பு அருகில் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் சிமெண்ட் மூடிகள் போடப்பட்டிருந்து. மாநகராட்சி அலுவலர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கான்கிரீட் சிமென்ட் மூடிகளை உடைத்து விட்டனர். இதனால் இருசக்்கர வாகனங்களில் சென்ற சிலர் தவறி சாக்கடை கால்வாயில் விழுந்து காயமடைந்தனர்.இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டு சாக்கடைக்கு மூடி அமைக்கும்படி கோரினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சங்கத்தின் ரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் திறந்து கிடக்கும் சாக்கடைக்கு முன்பு மாலை அணிவித்து படையல் வைத்து கருமாதி செய்தனர். இதன்பிறகும் சாக்கடை கால்வாயை மூடிட நடவடிக்கை இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.Tags : sewage canal ,
× RELATED திமுக மெஜாரிட்டி பெறுவதை தடுக்க...