×

3 லாரி பறிமுதல் விசாரணைக்கு சென்ற கைதிகளை சிறையில் அடைப்பதில் காலதாமதம்

திருச்சி, ஜூன் 18: திருச்சி மத்திய சிறையில் நேற்று விசாரணைக்கு சென்ற கைதிகளை மீண்டும் சிறையிலடைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்திதால் மத்திய சிறைச்சாலை முன் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி மத்திய சிறையில் 1,450க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இதில், சிறையில் கைதிகள் அனைவரும் காலை 7 மணிக்கு சிறைவாசல் திறக்கப்பட்டு மீண்டும் மாலை 5 மணிக்கு சிறைக்குள் அடைக்கப்படுவது வழக்கம். மாலையில் சிறை கைதிகள் எந்த சிறை அறையில் எந்தெந்த கைதி அடைக்கப்பட வேண்டும் என பட்டியலில் பெயர் படித்து அதன் படி கைதிகள் அடைக்கப்படுவது வழக்கம். இதற்காக அனைவரும் மாலை ஒன்றாக கூடி ரோல்கால்கிற்கு அணிவகுத்து நிற்க வேண்டும்.இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிையை கடந்தும் வெளியே சென்ற சிறை காவல் நீட்டிப்பு கைதிகளை அடைக்க சிறை அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் கைதிகள் சிறை மெயின் கதவிற்கு அருகே காத்திருந்திருந்தனர். இதில் ஒரு சில கைதிகள் தப்பியோடும் சூழலில் இருந்ததால் உடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசாருக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு வழியாக இரவு 7 மணிக்கு மேல் நீதிமன்ற காவல் நீட்டிப்பிற்கு சென்ற கைதிகள் கணக்கெடுப்பிற்கு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தினால் சிறை வளாகத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், காலை 7 மணிக்கு செல்லில் இருந்து வெளியே அனுப்பப்படும் கைதிகள் மீண்டும் மாலை 5 மணிக்கு கணக்கெடுத்து அனைத்து கைதிகளும் அவரவர் செல்லில் அடைக்கப்படுவர். இதனால் தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை வெளியே நீதிமன்ற காவலுக்கு சென்று திரும்பும் கைதிகள் குறித்த பட்டியல் தாமதமாக எடுப்பது வழக்கம். நேற்று இதேபோல் வெளியே சென்ற கைதிகளை ரோல்கால் முடித்து கணக்கெடுக்கும் பணி வழக்கம்போல் மாலை 6.30 மணிக்கு தொடர்ந்ததால் பணிக்கு சென்ற போலீசார் வீண்பழி சுமத்தினர். மேலும் கைதிகள் தப்பியோடியதாக புரளி கிளப்பி விட்டனர் என்றனர். இருப்பினும், விசாரணை கைதிகள் வெளியே சென்று திரும்பும்போது உடனடியாக அவர்களை விசாரித்து சிறையில் அடைப்பதே சிறந்தது. காலதாமதம் ஏற்பட்டு அவர்கள் உடன் சென்ற போலீசாரை ஏமாற்றி தப்பி சென்றால் வீண் அலைச்சல் போலீசாருக்கு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு விசாரணைக்காக வெளியே செல்லும் கைதிகளை உடனுக்குடன் நேரம் பார்க்காமல் சிறையில் அடைப்பது சிறந்தது என போலீசார் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : inmates ,trial ,truck confiscation ,
× RELATED சிறையில் இட்லி சாப்பிட்ட 13 கைதிகளுக்கு வயிற்று வலி