×

மனைதொழிலை பாதிக்கக்கூடிய நிலவழிகாட்டி மதிப்பு, பத்திர பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் கட்டுமானம் மனைத்தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தல்

திருச்சி, ஜூன் 18:  திருச்சியில் கட்டுமானம் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பொறியாளர் தென்னரசு தலைமை வகித்தார். பொறியாளர் சிவக்குமார் வரவேற்றார். கூட்டமைப்பின் செயலாளர்கள் யுவராஜ், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். யுவராஜ் கூட்டமைப்பு தலைவர் பொன்குமார் சிறப்புரையாற்றினார்.இதில் கட்டுமான மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டத்தில்மணல் விலையை குறைத்து கட்டுமான பணிக்கு தாராளமாக மணல் கிடைக்க தேவையான குவாரிகள் திறக்க வேண்டும். சிமெண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான நலவாரியங்களில் வாரிய பதிவு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகள் மந்தமாக நடப்பதை ஆய்வு செய்து விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனை தொழிலை பாதிக்கக்கூடிய நில வழிகாட்டி மதிப்பு, பத்திரபதிவு கட்டணம், போன்றவற்றை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அபரிதமாக உயர்த்தி விட்டார். அதனால் மனை தொழில் முடங்கி விட்டது. எனவே பிறமாநிலங்களில் உள்ளதை போன்று பதிவு கட்டணம் மற்றும் நில வழிகாட்டி மதிப்பை குறைத்து நடைமுறைபடுத்திட வேண்டும். கட்டுமான துறை பெரிய அளவில் வேலை வாய்ப்பை அளிக்க கூடியதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடியதால் கட்டுமான துறைக்கு தனி அமைச்சகத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்திட வேண்டும். வீட்டுமனைக்கான அனுமதி மற்றும் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை எளிமைப்படுத்தி சிங்கிள் விண்டோ சிஸ்டம் மூலம் வழங்கிட அரசு நடவடி–்க்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில் திருச்சி மாவட்டத்திலிருந்து நிர்வாகிகள் ஏரளமானோர் கலந்து கொண்டனர். பரணிதரன் நன்றி கூறினார்.



Tags : Construction Land Industry Federation ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ