×

மாநகராட்சி அலுவலகம் பின்புறம் திறந்தவெளியில் மது அருந்துவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி, ஜூன் 18: திருச்சி மாநகராட்சி அலுவலகம் பின்புறம் மர்மநபர்கள் மதுஅருந்தும் இடமாக பயன்படுத்துவதால் திறந்தவெளி பாராக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளை உள்ளடக்கி செயல்படுகிறது. இதற்காக 4 கோட்டங்களும், மைய அலுவலகமும் உள்ளது. திருச்சி பாரதிதாசன் சாலையில் மாநகராட்சி மைய அலுவலுகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்திற்கு பின்புறம் கேண்டீன், நீரேற்று நிலையம், சேவைமையம் ஆகியவை உள்ளது. இங்கு வருபவர்களில் மர்மநபர்கள் சிலர் மாநகராட்சியின் பின்பகுதியில் அமர்ந்து மது அருந்தும் திறந்தவெளி பார் போல் பயன்படுத்துகின்றனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. பொது இடங்களில் மது குடிக்கக்கூடாது என்ற விதிமுறைகள் இருக்கும் நிலையில் மாநகராட்சி மட்டும் விதிவிலக்கு போல் உள்ளதாக என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே மாநகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் மர்மநபர்கள் ஊடுருவதை கண்காணித்து திறந்தவெளி பார் போல் மதுஅருந்துவதை தடுத்திட வேண்டும் எனவும், மதுஅருந்துவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை