போலி ஆவணங்கள் மூலம் நிலம், வீட்டுமனை அபகரிப்பு

விழுப்புரம்,   ஜூன் 18: போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரித்தவர்கள் மீது  நடவடிக்கை  எடுக்கக்கோரி விழுப்புரம் எஸ்பியிடம் மனு அளித்தனர்.விழுப்புரம்  அருகே  செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் உறவினர் நேற்று  எஸ்பி  அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:செம்மேடு,  வெள்ளேரிப்பட்டு  ஆகிய கிராமத்தில் எனது பெயரிலும், தந்தை பெயரிலும் நிலம்,  வீட்டுமனை  உள்ளது. நான் மட்டுமே இதற்கு வாரிசு. எனது தாத்தா, தந்தை  இறந்துவிட்ட  நிலையில் இச்சொத்துக்கள் எனக்கு மட்டுமே சொந்தம். ஆனால் சிலர்  இந்த  சொத்துக்களை போலியாக ஆவணம் தயாரித்து கிரையம் செய்தும்,  ஆக்கிரமிப்பு  செய்து மோசடி செய்துவிட்டனர். என்னிடம் அபகரித்த சொத்துக்களை  மீட்டு  ஒப்படைக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Land ,house arrest ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் இருந்த 4 தலைவர்கள் விடுதலை