காவல்நிலைய அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 18: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட புதுநன்னாவரம், இருந்தை, ஆரியநத்தம் உள்ளிட்ட பல கிராமங்களில் காவல்துறை சார்பில் கொலை மற்றும் பல்வேறு பிரச்னைகளில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாததையும், அந்த காவல்நிலைய அதிகாரிகளை கண்டித்தும் நேற்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.

 தர்மலிங்கம், அய்யனார், குணசேகர், ஜோதிராமன், குமார், குடியரசுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பூவராகவன், ஸ்டாலின்மணி, ஜெய்சங்கர், ஆறுமுகம், சீனுவாசன், செந்தில், தங்கராசு, ஜெயக்குமார், அலமேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Tags : police officers ,
× RELATED உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும்...