ஆத்தூரில் அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆத்தூர், ஜூன் 18: ஆத்தூரில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு,  இந்திய மருத்துவ  சங்கத்தின் ஆத்தூர் கிளை சார்பில், ஒரு நாள் அடையாள வேலை  நிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீதான  தாக்குதலை கண்டித்தும், மருத்துவர்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு மத்திய அரசு கடுமையான சட்டம் இயற்ற  வேண்டியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் ஆத்தூர் கிளை தலைவர் டாக்டர் லதா தலைமை வகித்தார்.  

இதில் ஆத்தூர் கோட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று, பணியிடத்தில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய  வேண்டும் என கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை நிர்வாகி  டாக்டர் செங்குட்டுவன் கண்டன உரையாற்றினார். மருத்துவர்கள் ரபீந்திரநாத்,  வேல்முருகன், சம்பத்குமார், கோவிந்தராஜ், மாதவன், தனலட்சுமி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

Tags : Government physicians ,Athur ,
× RELATED ஆத்தூரில் தேமுதிக கொடியேற்று விழா