அரசு பள்ளியில் கட்டாய வசூலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 18:சேலம் அருகே பனமரத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே, நடப்பாண்டு இப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டாய வசூல் நடந்ததாக புகார் எழுந்தது. இதனை கண்டித்து, நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் பனமரத்துப்பட்டி சந்தைேபட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அய்யனார் தலைமை வகித்தார். மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப  வழங்கவேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி கண்ணன், கலாச்சார இயக்க ஒருங்கிணைப்பாளர் பொன் சரவணன், தமிழ்தேச இயக்கம் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.Tags : demonstration ,government school ,
× RELATED ஆர்ப்பாட்டம்