நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு, ஜூன் 18: திருச்செங்கோடு வேலூர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகித்தார்.  மாவட்ட துணை செயலாளர்கள் சேகர், செல்வராஜ்,  மாவட்ட பொருளாளர் குமார், தலைமை  செயற்குழு  உறுப்பினர்கள்  யுவராஜ், செழியன்,  பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பழகன், செல்வராஜ், அம்பிகா,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ, தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில், மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியப்பகுதிகளில், ஆதிதிராவிடர் நலக்குழு அமைத்து, அதன் பொறுப்பாளர்கள் பட்டியலை மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க  வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்க  வேண்டும்.

மறைந்த தலைவர்  கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செங்கோட்டில் வருகிற 29ம் தேதி ராசா எம்பி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நகர செயலாளர்கள் கார்த்திகேயன், வெங்கடேசன், ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள்தங்கவேல், சண்முகம், தங்கவேல், சண்முகம், தனராசு, செல்வராஜ், பழனிவேல், பேரூர் செயலாளர்கள்  ரமேஷ்பாபு, மணிமாரப்பன், கருணாநிதி, ராமலிங்கம், மகாமுனி, திருமலை,  இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில்,  ராஜமாணிக்கம், கிரிசங்கர் உள்ளிட்ட  பலர் கலந்து  கொண்டனர். துணை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
Tags : Namakkal ,district ,executive committee meeting ,DMK ,
× RELATED இழப்பீடுக்காக கார்களை ஜப்தி செய்ய...