×

ைகத்தறி நெசவாளர்களின் பணப்பலன் நிறுத்தி வைப்பு

நாமக்கல், ஜூன் 18: மல்லசமுத்திரத்தில் கூட்டுறவு நெசவாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், தங்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்களை பெற்றுத் தரக்கோரி, கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர்.திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரத்தில், பெரியகொல்லப்பட்டி கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு மற்றும் விற்பனையாளர் சங்கம் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த சங்கத்தில் 1500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் உறுப்பினர்கள், தங்களது கைத்தறி மூலம் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட துணி வகைகளை நெசவு செய்து, சங்கத்தில் கொடுத்து அதற்கான கூலியை பெற்று வருகின்றனர். இச்சங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, பல நாட்களாக பணி வழங்கவில்லை.

கூட்டுறவு சங்கத்தில் நெசவு பணி இல்லாததால், வாழ்க்கை நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர். சங்கத்தில் பல ஆண்டுகள் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு ஓய்வூதியம், வைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களை வழங்காமல், அதிகாரிகள் நிலுவை வைத்துள்ளனர். எனவே, கைத்தறி நெசவாளர்களுக்கு சேர வேண்டிய பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, ஏராளமான நெசவாளர்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் ஆசியாமரியத்தை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.




Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்