கொல்லிமலை அரசு பண்ணையில் பழச்செடி விற்பனை

சேந்தமங்கலம், ஜூன் 18: ெகால்லிமலை அரசு பண்ணை சார்பில், பழச்செடிகள் விற்பனை செய்யப்படுகிறது.  கொல்லிமலையில் செம்மேடு, படசோலையில் அரசு தோட்டக்கலை பண்ணைகள் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நடவுச்செடிகள் மற்றும் பண்ணையில் சாகுபடி செய்யப்படும் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கான, தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் சில்லரை விற்பனை நிலையம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது திருமணம் போன்ற குடும்ப விழாக்களில் விருந்தினர்களுக்கு மரக்கன்று வழங்கப்படுகிறது. இப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு அடிப்படையில் உற்பத்தி செய்து, தோட்டங்கலை வளர்ச்சி முகமை விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. விபரங்களுக்கு, தோட்டக்கலை அலுவலர் செம்மேடு, படசோலை, என்ற முகவரியில் தொடர்பு கொள்ளாலாம் என உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.Tags : Government Ranch ,
× RELATED கொல்லிமலையில் மழை பெய்தும் நிரம்பாத பொம்மசமுத்திரம் ஏரி