செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு

திருச்செங்கோடு, ஜூன் 18: திருசெங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில், தேசிய அளவிலான  தொழில் நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் மூலம் இயங்கும் ஐசிஎஸ்எஸ்ஆர்  என்ற அமைப்பு மற்றும் செங்குந்தர் பொறியியல் கல்லூரி சார்பாக இயங்கும் இம்ப்ரஸ்  திட்டமும் இணைந்து,  இந்த கருத்தரங்கை நடத்தின. கல்லூரி முதல்வர்  வெங்கடேஷ் வரவேற்றார். தாளாளர் மற்றும் செயலாளருமான பேராசிரியர் பாலதண்டபாணி தலைமை வகித்தார். கல்லூரிகளின் தலைவர் தொழிலதிபர் ஜான்சன்ஸ்  நடராஜன் வாழ்த்திப் பேசினார்.  முதன்மை நிர்வாக அதிகாரி மதன்  மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக  சென்னை தொழிலதிபர்  ஆதிப்ஷா  கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து கருத்தரங்க மலரை அவர் வெளியிட்டார். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் தனலஷ்மி, சுஜிதா, ராஜலஷ்மி, ஹெலன்பிரபா, பொன்முருகன், கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர். கருத்தரங்கில் கலந்து கொண்ட பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு தாளாளர் பேராசிரியர் பாலதண்டபாணி சான்றிதழ்களை வழங்கினார். மேலாண்மை துறை தலைவர் மாரியப்பன்  நன்றி கூறினார்.Tags : Level Technology Seminar ,Sankundar Engineering College ,
× RELATED உதவி ஆணையர் முன்னிலையில் நடந்த...