திருச்செங்கோடு அருகே அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்

திருச்செங்கோடு, ஜூன் 18: திருச்செங்கோடு அருகேயுள்ள தண்ணீர்பந்தல்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.உலகளாவிய சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை மாணவ, மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில், சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, தலைமை ஆசிரியை பங்கஜவள்ளி  தலைமை வகித்தார். இதில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி,  பொருளாளர் செல்லப்பன் ஆகியோர்  பேரணியைத் துவக்கி வைத்தனர். இதில், பசுமைப்படையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.   பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்  சுகுணா  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

Tags : Government School ,Environment Day ,Tiruchengode ,
× RELATED அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்: திண்டுக்கல்லில் பரபரப்பு