திருச்செங்கோட்டில் குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்

திருச்செங்கோடு, ஜூன் 18: திருச்செங்கோடு- சங்ககிரி பிரதான சாலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு முன்னதாக செல்லும் காவிரி குடிநீர் குழாய் உடைந்து விட்டது. இதிலிருந்து  வெளியேறும் தண்ணீர், அங்குள்ள  குப்பைகளை அடித்துச் சென்று சாக்கடையில் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே,  குழாய் உடைப்பை விரைந்து சரி செய்து, தண்ணீர் வீணாவதை தடுத்து, சுற்றுச்சூழல் மாசடைவதையும்  தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.       


Tags :
× RELATED இன்று நடக்கிறது வேப்பந்தட்டை ஒன்றிய...