×

கிறிஸ்துபாளையத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி

தேன்கனிக்கோட்டை, ஜூன் 18:  கிறிஸ்துபாளையம் கிராமத்தில், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தளி.பிரகாஷ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை அருகே, கிறிஸ்துபாளையம் கிராமத்தில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் ₹1 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி.பிரகாஷ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சீனிவாசலுரெட்டி, அவைத்தலைவர்கள் கிரிஸ், நாகராஜ், துணை செயலாளர் முனிராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேணு, சிறுபான்மை அணி பவுல்ராஜ், தலைமை ஆசிரியர் சார்லஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags : Christchurch ,
× RELATED நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில்...