வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 4 பேர் பலி

கிருஷ்ணகிரி, ஜூன் 18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 4 பேர் பலியாகினர். ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டதிம்மனஅள்ளி டிவிகே நகரை சேர்ந்தவர் முனிராஜ் (35), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், டூவீலரில் ராயக்கோட்டை சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். டிவிகே நகர் அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட முனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கந்திகுப்பம் அருகே, நேற்று முன்தினம் ஒரப்பம் கூட்டு ரோடு சாலையை, சுமார் 30வயது மதிக்கத்தக்க வாலிபர் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் கந்திகுப்பம் போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாகனம் மோதி உயிரிழந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி: சூளகிரி தபால் நிலையம் அருகே, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 35வயது மதிக்கத்தக்க நபர், நேற்று முன்தினம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம், அவர் மீது பயங்கரமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், வாகனம் வருவதற்குள்அந்த வாலிபர் உயிரிழந்தார்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், தர்மபுரியை சேர்ந்த மூர்த்தி(24) என்பவர், ஓசூருக்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். சின்னாறு என்ற இடத்தில் வந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் எதிர்பாராத விதமாக மோதினார். இதில் படுகாயமடைந்த மூர்த்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accidents ,
× RELATED வாலிபர் உள்பட 2பேர் தற்கொலை