அமைச்சுப்பணி அலுவலர் சங்க நிர்வாகிகள் தேர்வு

கிருஷ்ணகிரி, ஜூன் 18:  கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் பேரவைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் ஆணையாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இதில், சங்கத்தின் புதிய மாவட்ட தலைவராக கிருஷ்ணகிரி நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலர் கண்காணிப்பாளர் முத்துராமன், செயலாளராக மத்தூர் அரசு மருத்துவமனை உதவியாளர் திருநாவுக்கரசு, பொருளாளராக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை உதவியாளர் சபாபதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதே போல் துணைத் தலைவர்களாக (நகரம்) கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் சங்கர், (பொது) ஓசூர் அரசு இஎஸ்ஐ மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் யுவராஜன், (புறநகர்) பர்கூர் அரசு மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் ஆனந்தகுமார், (மகளிர்) கிருஷ்ணகிரி நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் சுமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணை செயலாளராக ஊத்தங்கரை சுகுமார், அமைப்பு செயலாளராக தேன்கனிக்கோட்டை மணிகண்டன், பிரசார செயலாளராக பர்கூர் பழனி மற்றும் இணை செயலாளர், மகளிர் அணி செயலாளர், இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.  புதிய நிர்வாகிகளை சரவணன், நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் யுவராஜன் நன்றி கூறினார்.Tags : Ministry Officers Association ,
× RELATED காவேரிப்பட்டணம் அருகே பரபரப்பு தவறான சிகிச்சையால் தொழிலாளி திடீர் சாவு